ஆப்நகரம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 30 மணிநேர போரட்டத்திற்கு பிறகு மீட்பு

பீகார் மாநிலதில், 165 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை 30 மணி நேர போரட்டத்திற்கு பிறகு மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2018, 10:18 am
பீகார் மாநிலதில், 165 அடிஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயதுசிறுமியை30மணி நேர போரட்டத்திற்குபிறகு மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Samayam Tamil s3o3m8q_bihar-borewell_625x300_01_August_18


பீகார் மாநிலத்தில் உள்ளமுங்கர் மாவட்டத்தி 3 வயது சன்னோ பெற்றோருடன் வாழ்ந்துவருகிறார். சன்னோ, அவரது தாத்தாவீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் திடீரென்று விழுந்தார்.
உடனடியாக சிறுமியின் உறவினர்கள்காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்துவந்ததேசிய பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சிறுமிக்கு அவ்வப்போதுதேவையான உணவுமற்றும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

சிசிடிவி கேமிராவை ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் கொண்டு சென்று சிறுமியை தொடர்ந்து கண்காணித்தனர்.

இந்நிலையில் சுமார் 30 மணிநேர போரட்டத்திற்கு பிறகு சிறுமிஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார்.மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவக்குழு முதல் உதவி செய்தது.

தற்போது 3 வயதான சன்னோவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி