ஆப்நகரம்

39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் புகார்: விசாரணை நடப்பதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில், 39 பேர் மீது ஊழல் புகார் பற்றி விசாரணை நடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 27 Jun 2017, 5:30 pm
நாடு முழுவதும் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில், 39 பேர் மீது ஊழல் புகார் பற்றி விசாரணை நடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil 39 ias officers under scanner for alleged corruption dopt
39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் புகார்: விசாரணை நடப்பதாக மத்திய அரசு தகவல்


இதுபற்றி மத்திய பணியாளர் நியமனம் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் புகார் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அமைச்சரவை பணிகளில் ஈடுபட்டுள்ள 29 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் முறைகேடு புகார் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்தம் 68 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களில் பலர் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எனவும் மத்திய பணியாளர் பயிற்சித் துறை கூறியுள்ளது. புகார் உறுதி செய்யப்படும்பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

As many as 39 IAS officers are under investigation for their alleged involvement in corruption and other irregularities

அடுத்த செய்தி