ஆப்நகரம்

சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுத்த 4% மக்கள்

மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை 4% குடும்பத்தினர் விட்டுக்கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 26 May 2018, 8:56 am
மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை 4% குடும்பத்தினர் விட்டுக்கொடுத்துள்ளனர்.
Samayam Tamil 64326153


நாட்டில் மொத்தம் 26 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடி பேர் கடந்த 2016 ஆண்டிலேயே மானியத்தை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பொதுமக்கள் விரும்பினால் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கலாம் என்று அறிவித்தார்.

இதன்படி, நாடு முழுவதும் 4% குடும்பத்தினர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தைத் தொகை தங்களுக்கு வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 14%, நாகாலாந்தில் 12% மணிப்பூரில் 10% பேர் மானியம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 12% பேர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டராவில் 6% பேர் மானியத்தைத் தவிர்த்துள்ளனர். கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 5% பேரும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4% பேரும், பீகார், சட்டிஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 3% பேரும் சிலிண்டர் மானியத்தைத் துறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 2% பேரும் ஆந்திராவில் 1% பேரும் மானியத்தை ஒப்படைத்துள்ளனர்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 4% குடும்பங்கள் மட்டுமே சிலிண்டர் மானியத்தைத் தவிர்த்துள்ளனர்.

அடுத்த செய்தி