ஆப்நகரம்

மும்பை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 17 Jul 2019, 9:00 am
மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று பிற்பகல் நான்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil 201907161256326916_1_mumbai-building1._L_styvpf


மும்பை டோங்கிரி பகுதியில் முகமது அலி சாலையில் உள்ள அப்துல் ஹமீது தர்கா அருகே கேசர் பாய் என்ற குடியிருப்பு ஒன்று இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலரும் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலரும் அருகில் இருந்த ஜேஜே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.



மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 20 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதி மிகவும் குருகலான பகுதி என்பதால் அங்கு இயந்திரங்களையோ, வாகனங்களையோ பயன்படுத்தி இடிபாடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முழுக்க முழுக்க மனித சக்தியை கொண்டே கைகளால் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், மீட்பு பணிகள் மந்த நிலையிலேயே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், விபத்திற்குள்ளான கட்டிடம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டிடத்தை இடிக்க கடந்த 2012ம் ஆண்டே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் கட்டிடம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், கட்டிடத்தை இடிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கட்டிடம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி