ஆப்நகரம்

மகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக கொள்ளும் கொரோனா..! ஒரே நாளில் 419 பேர் பலி...

மகாராஷ்டிராவில் தற்போது 6,47,933 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Samayam Tamil 17 Apr 2021, 9:17 pm
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் படிப்படியாக பரவ தொங்கியது. அன்று முதல் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் (சனிக்கிழமை) மகாராஷ்டிராவில் 67,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தியதால் தனிசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் 419 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,70,707 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மருந்து விலை அதிரடியாக குறைப்பு!

இதுவரை மகாராஷ்டிராவில் 30,61,174 நோயாளிகள் குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 56,783 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 35,72,584 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 25,623 பேர் நிறுவன தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு 63,729 ஆக பதிவாகியது. புனேவில் மட்டும் இன்று ஒரே நாளில் 12,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுளளனர். அதனை தொடர்ந்து மும்பையில் 8,811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக 51 பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி