ஆப்நகரம்

கை கொடுக்குமா கூவத்தூர் ஃபார்முலா: காங். எம்எல்ஏக்கள் குஜராத் வருகை

பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று குஜராத் வந்தனர்.

TNN 7 Aug 2017, 3:19 pm
அகமதாபாத்: பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று குஜராத் வந்தனர்.
Samayam Tamil 44 gujarat congress mlas return from bengaluru amid high security
கை கொடுக்குமா கூவத்தூர் ஃபார்முலா: காங். எம்எல்ஏக்கள் குஜராத் வருகை


குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் அகமது படேல். அவருக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவை தக்கவைக்க அம்மாநில காங்கிரஸ் விரும்பியது. இதற்காக, தமிழகத்தில் நடைபெற்றது போல, ஒரு ஃபார்முலாவை பின்பற்றியது காங்கிரஸ்.

சசிகலா தரப்பினர் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை அடைத்துவைத்தது போல, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் ஒன்றில் அடைகாக்கப்பட்டனர்.

நாளை மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதன் மூலம் கடந்த பத்து நாட்களாக ஒரே இடத்தில் சிக்கி இருந்த எம்எல்ஏக்களுக்கு சற்று விடுதலை கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி