ஆப்நகரம்

உணவின்றி பசியின் கொடுமையில் இறந்த 46 பசுகள்

ஆந்திர மாநிலத்த்தில் உணவின்றி பசியின் கொடுமையால் 46 பசுக்கள் பலியாகியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளது.

TNN 23 Jul 2017, 8:48 am
காக்கிநாடா : ஆந்திர மாநிலத்த்தில் உணவின்றி பசியின் கொடுமையால் 46 பசுக்கள் பலியாகியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 46 cows die due to pneumonia starvation
உணவின்றி பசியின் கொடுமையில் இறந்த 46 பசுகள்



ஆந்திர மாநிலம் கோதவரி மாவட்டத்தில் விலங்குகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் அதரவற்ற 480 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழையால் பசுக்களுக்கு தோற்று ஏற்பட்டுள்ளதாக கூறஸ்ப்படுகிறது.

மேலும் 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில் 480 பசுக்களை பராமரிக்கப்பட்டுவந்துள்ளது. இதனால் இங்குள்ள பசுக்களில் சில மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

உணவுப் பற்றாக்குறையால் பல பசுக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தகவல் அளித்த மாவட்ட கால்நடைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 47 ஆதரவற்ற பசுக்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளது. அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

அடுத்த செய்தி