ஆப்நகரம்

மத்திய, மாநில அரசுகளின் இரண்டு திட்டங்களிலும் பயனடையும் தெலங்கானா விவசாயிகள்

தெலங்கானாவில் 47 லட்சம் விவசாயிகள் அம்மாநிலத்தின் ’ரூய்து பந்து’ திட்டம் மற்றும் மத்திய அரசின் ’பிரதான் மந்திரி கிஷன் சமன் நிதி’ திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Samayam Tamil 2 Feb 2019, 7:22 pm
தெலங்கானாவில் 47 லட்சம் விவசாயிகள் அம்மாநிலத்தின் ’ரூய்து பந்து’ திட்டம் மற்றும் மத்திய அரசின் ’பிரதான் மந்திரி கிஷன் சமன் நிதி’ திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Samayam Tamil 47 லட்சம் தெலங்கானா விவசாயிகளுக்கு அடித்தது இரண்டு அதிர்ஷ்டங்கள்..!!


தெலங்கானா வேளாண்மை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் தகுதி பெற்றுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் ரூ. 10 ஆயிரம் பணமும், மத்திய அரசின் ரூ. 6 ஆயிரம் தொகையும் நிதியாக கிடைக்கும். தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தகுதி பெற்றுள்ள விவசாயிகள் எப்படி மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் இரண்டு திட்டத்திலும் பயன் பெற முடியும் கேள்வி எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பேசிய தெலங்கானா மாநில அரசில் பணியாற்றும் முக்கிய அதிகாரி சித்லா பார்த்தசாரதி, தற்போது தகுதி பெற்றுள்ளவர்கள் குறித்து மாநில அரசு கணெக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மாநில அரசின் திட்டத்திற்குரியவர்களுக்கு நிதிப்பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக போடப்படும் என்று கூறினார். மேலும், ரைய்து பந்து திட்டத்திற்கு கூடுதலாக 10 லட்சம் விவசாயிகள் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சொந்தமாக 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கும் விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்திற்கு தகுதி உடையவர்கள். அவர்களுக்காக ஆண்டுதோறும் ரூ. 6,000 வழங்கப்படும். ஆனால் தெலங்கானாவில் ரைத்து பந்து திட்டத்தில் பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தகுதியுள்ளது.

தெலங்கானா மாநில வேளாண் துறை அமைச்சகம், ‘ரைது பந்து’ திட்டத்திற்காக இந்தாண்டு மொத்தம் ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்க கேட்டு கடிதம் எழுதியுள்ளது. கடந்தாண்டு இதே திட்டத்திற்காக ரூ. 10 ஆயிரம் கோடியை மாநில அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தகக்து.

அடுத்த செய்தி