ஆப்நகரம்

மணிப்பூரில் நிலநடுக்கம்!

மணிப்பூரில் நிலநடுக்கம்!

TOI Contributor 24 Feb 2017, 7:41 pm
ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவிற்கு மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Samayam Tamil 5 2 magnitude earthquake in manipur
மணிப்பூரில் நிலநடுக்கம்!


மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள சுராசந்த்பூர் எனும் பகுதியில் மாலை 5.33 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 கிமீ சுற்றளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 70 கிமீ தொலைவில் சுராசந்த்பூர் எனும் ஊர் உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மணிப்பூர் அரசு உறுதிசெய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இது போன்ற நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்று. கடந்த வருடம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரின் மோசமான நிலநடுக்கம் 1988ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவானது.

அடுத்த செய்தி