ஆப்நகரம்

புட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் ஐவர் சரண்

கடந்த ஞாயித்துக்கிழமையன்று பரவூர் புட்டிங்கல் கோவில் திருவிழாவின் போது நடந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சூழலில்,இது தொடர்பாக புட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் 5 பேர் கேரள போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்

TNN 12 Apr 2016, 9:33 am
கொல்லம்: கடந்த ஞாயித்துக்கிழமையன்று பரவூர் புட்டிங்கல் கோவில் திருவிழாவின் போது நடந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சூழலில், இது தொடர்பாக புட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் 5 பேர் கேரள போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்.
Samayam Tamil 5 members of keralas puttingal temples managing committee surrender
புட்டிங்கல் கோவில் நிர்வாகிகள் ஐவர் சரண்


பரவூர் புட்டிங்கல் தேவி கோயில் அறக்கட்டளையின் தலைவர் ஜெயலால், செயலாளர் கிருஷ்ணன் குட்டி, நிர்வாகிகள் ‌சிவப்பிரசாத், சுரேந்திரன் பிள்ளை மற்றும் ரவீந்திரன் பிள்ளை ஆகியோர் கொல்லம் காவல் நிலையத்தில் சரண் அடைந்திருப்பதாக கேரள மாநில காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரவூர் புட்டிங்கல் கோவில் திருவிழாவின் போது நடந்த வான வேடிக்கையால் ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவு வாங்கியும், 350-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தும் மிக கொடுமையான தாக்குதல் நடந்துள்ளது.

இது தொடர்பாக கேரள போலீசார் பட்டாசு ஒப்பந்தக்காரர்கள் உள்பட 25க்கும் மேற்பட்டவர்கள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த கோவில் அறக்கட்டளையின் தலைவர் ஜெயலால், செயலாளர் கிருஷ்ணன் குட்டி, நிர்வாகிகள் ‌சிவப்பிரசாத், சுரேந்திரன் பிள்ளை மற்றும் ரவீந்திரன் பிள்ளை ஆகியோர் இன்று காலையில் கேரள போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி