ஆப்நகரம்

இந்தியப் பெண்களை வாட்டும் ரத்த சோகை: அதிர்ச்சித் தகவல்

ரத்த சோகை நோய் உலக அளவில் இந்தியப் பெண்களையே அதிகம் பாதிப்பதாக உலக ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது.

TOI Contributor 7 Nov 2017, 12:09 pm
ரத்த சோகை நோய் உலக அளவில் இந்தியப் பெண்களையே அதிகம் பாதிப்பதாக உலக ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil 51 of indian women aged 15 49 anaemic most in world study
இந்தியப் பெண்களை வாட்டும் ரத்த சோகை: அதிர்ச்சித் தகவல்


இத்தாலியில் நடைபெற்ற உலக ஊட்டச்சத்து மாநாட்டில் உலக ஊட்டச்சத்து அறிக்கை 2017 வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி உலக அளவில் இந்திய பெண்களே ரத்த சோகை நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 51 சதவீதம் பேருக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து மோசமான நிலையில் உள்ளன. மேலும், இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு (22 சதவீதம்) உடல் பருமனால் அவதிப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

140 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தி ஆய்வில் 88 சதவீதம் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைப் பருவத்தில் மனநல பாதிப்பு மற்றும் அதி எடை ஆகியவற்றினால் அவதிப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழுமையான ஆய்வறிக்கையைப் படிக்க, https://reliefweb.int/sites/reliefweb.int/files/resources/Report_2017.pdf

அடுத்த செய்தி