ஆப்நகரம்

உறைய வைக்கும் குளிரில் ஐஸ்ரோ பெண் விஞ்ஞானியின் சாதனை

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் இந்தியப் பெண் விஞ்ஞானி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2018, 1:34 am
பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் இந்தியப் பெண் விஞ்ஞானி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Samayam Tamil 56 year old first isro woman to spend over a year in antarctica
உறைய வைக்கும் குளிரில் ஐஸ்ரோ பெண் விஞ்ஞானியின் சாதனை


56 வயதான மங்கள மணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த பெண் விஞ்ஞானி. இவர் தென் துருவத்தில் உறைபனிச் சூழல் நிலவும் அண்டார்டிகா கண்டத்தில், இஸ்ரோவின் பாரதி விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்.

403 நாட்களுக்கு மேலாக அங்கே தங்கிய அவர் அதிக நாட்கள் அண்டார்டிகாவின் நடுக்கும் குளிரில் வசித்த இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு 23 பேர் கொண்ட குழு அண்டார்டிகாவில உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இந்த குழுவில் தேர்வாவதற்கு முன் நடைபெற்ற உடல்தகுதிச் சோதனைக்காக மிகவும் கனமான உடைகள் அணிந்து கனத்த பைகளையும் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் மங்கள மணி. அதுவும் அண்டார்டிகாவில் நிலவும் பனிமயமான சூழலில் தாக்குப்பிடிக்க முடிகிறதா என்று சோதிக்கும் நோக்கில் பனிப்பிரதேசமான பத்ரிநாத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மங்கள மணி தனது பணியையும் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.

இஸ்ரோ அனுப்பிய துருவப் பகுதிகளை ஆய்வு செய்யும் செயற்கைக் கோள்கள் அனுப்பும் தரவுகள் அனைத்தும் அண்டார்டிகாவில் உள்ள ஆய்வு மையத்திற்குக் கிடைக்கின்றன. அவற்றைப் பெற்று இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோ ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பவதுதான் மங்கள மணி செய்யும் பணி.

மத்திய அரசின் தேசிய அண்டார்டிகா மற்றும் கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் இதைப் போன்ற ஆய்வுகள் அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த செய்தி