ஆப்நகரம்

ஒன்னா, ரெண்டா ; 600 முறைனா சும்மாவா விடறது; எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்!

நடப்பாண்டில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 600 முறை அத்துமீறியுள்ளது.

TNN 7 Oct 2017, 10:19 am
டெல்லி: நடப்பாண்டில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 600 முறை அத்துமீறியுள்ளது.
Samayam Tamil 600 ceasefire violations by pakistan in 2017
ஒன்னா, ரெண்டா ; 600 முறைனா சும்மாவா விடறது; எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்!


இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ தூர எல்லை அமைந்துள்ளது. அதில் 221 கி.மீ சர்வதேச எல்லையாகவும், 740 கி.மீ தூர எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஜம்மு காஷ்மீரிலும் உள்ளது.

இருநாடுகளிடையே பல ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானின் அத்துமீறும் செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் 600க்கும் அதிகமான முறை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் துப்பாக்கிச்சூடு, சிறிய ரக மோட்டார் குண்டு தாக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் 8 பொதுமக்கள், 16 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டில் 450 முறை பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

600 ceasefire violations by Pakistan in 2017.

அடுத்த செய்தி