ஆப்நகரம்

ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களை ஏமாற்றிய மோடி

அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாதது அவர்களை ஏமாற்றியுள்ளது. இனிமேல் மத்திய அரசுக்கு இது பற்றிய அறிவிப்பை வெளியிட உரிய வாய்ப்பு அமையுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

Samayam Tamil 10 Mar 2019, 2:02 am
மத்திய அரசு ஊழியர்ககள் ஊதியம் உயர்வை எதிர்பார்த்த நிலையில் மத்திய அமைச்சரவை அவர்கள் ஏமாற்றியுள்ளது.
Samayam Tamil 7th-pay-commission1


மத்திய அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு அப்பால் அடிப்படை ஊதியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தற்போதைய அடிப்படை ஊதியம் தங்கள் பொருளாதார நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அவசரமாக அறிவித்துவரும் பாஜக அரசு தங்களுக்கு ஊதிய உயர்வையும் அறிவிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் தெரியவரவில்லை. தேர்தல் ஆணையம் விரைவில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளது. அந்த அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகிவிடும் என்பதால் அரசு எந்த புதிய அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலை ஏற்படும்.

இச்சூழலில் அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாதது அவர்களை ஏமாற்றியுள்ளது. இனிமேல் மத்திய அரசுக்கு இது பற்றிய அறிவிப்பை வெளியிட உரிய வாய்ப்பு அமையுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

ஆனால், அண்மையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை உயர்த்தப்பட்டது கூறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி