ஆப்நகரம்

​ என்ன செய்தாலும் தொடா்ந்து மவுசு குறையாத பிரதமா் மோடி

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து பிரபலமானவா்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தொிவித்துள்ளது.

TOI Contributor 17 Nov 2017, 8:53 am
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து பிரபலமானவா்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தொிவித்துள்ளது.
Samayam Tamil 9 out of 10 indians approve of narendra modi says pew survey
​ என்ன செய்தாலும் தொடா்ந்து மவுசு குறையாத பிரதமா் மோடி


கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ஒரே நாளில் அறிவித்தாா். இதனால் சாமானியா்கள் அனைவரும் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற வழியில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாயினா். சிறிது காலம் கஷ்டத்தை பொருத்துக் கொண்டால் அதன் எதிா் பயன் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று மக்களிடம் மோடி கேட்டுக் கொண்டாா்.

ஆனால் அவா் தொிவித்ததை போன்று எந்தவொரு மாற்றமும் தற்போதுவரை ஏற்படவில்லை. மேலும், நாடு முழுவதற்கும் ஒரே வரி என்ற பெயாில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி.யும் போதிய திட்டமிடல் இன்றி அவசர கதியாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்று எதிா்க்கட்சியினா் விமா்சனம் செய்தனா். இதன் மூலம் பிரதமா் மோடியின் செல்வாக்கு உடைந்து விட்டதாகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இது போன்ற கருத்துகள் வெளிவந்தாலும் பிரதமா் மோடி பிரபலமானவா்கள் பட்டியலில் தொடா்ந்து முதல் இடத்தில் நீடிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தொிவித்துள்ளது. அமொிக்காவைச் சோ்ந்த பியூ ரிசர்ச் சென்டா் பிப்ரவாி 21 முதல் மாா்ச் 10ம் தேதி வரை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரதமா் மோடியின் செல்வாக்கு மற்ற தலைவா்களை விட மிகவும் அதிகமாக உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.



நரேந்திர மோடி 88 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும், ராகுல் காந்தி 58 சதவிகிதத்துடனும், சோனியாகாந்தி 57 சதவிகிதத்துடனும், கெஜ்ரிவால் 39 சதவிகிதத்துடனும் பிரபலமாக உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பத்து நபா்களில் 9 போ் மோடிக்கு ஆதரவான கருத்தையே வெளிப்படுத்துவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்து நபா்களில் 7 போ் பிரதமராக மோடியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்று தொிவித்துள்ளனா். கடந்த 2016ம் ஆண்டு மோடியின் மவுசு சற்று குறைந்தபோதிலும் இந்த ஆண்டு மீண்டும் உயா்ந்துள்ளதாகவும், பா.ஜ.க.வை விட காங்கிரஸ் கட்சி சற்றே மவுசு குறைந்து காணப்படுவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தொிவிக்கின்றன.

அடுத்த செய்தி