ஆப்நகரம்

கோடிகளில் புரளும் 90% மாநிலங்களவை எம்.பி.க்கள்

தற்போதையை மாநிலங்களவை எம்.பி.க்கள் 90% பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2018, 7:16 pm
தற்போதையை மாநிலங்களவை எம்.பி.க்கள் 90% பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Samayam Tamil Image00015


அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு தாமாக முன்வந்து தங்கள் வருமானம் மற்றும் உடைமைகள் குறித்த தகவல்களை அளித்த 229 எம்.பி.க்கள் சொத்து மதிப்பை ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சராசரியாக ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கு ரூ.55.62 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. 229 பேரில் 201 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது, 88 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மகேந்திர பிரசாத் ரூ.4,078.41 கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார். அடுத்தபடியாக, அமிதாப் பச்சனின் மனைவியும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜெயா பச்சன் ரூ.1001.64 கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார்.

பாஜகவின் ரவீந்திர கிஷோர் ரூ.857.11 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது பெரிய கோடீஸ்வர எம்.பி.யாக உள்ளார். பாஜக எம்.பி.க்களில் 64 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27.80 கோடி. காங்கிரஸின் 50 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.40.98 கோடி. சமாஜ்வாதி கட்சியின் 14 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.92.68 கோடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் 13 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.22 கோடி.

51 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அதில் 20 பேர் மீது மிகப்பெரிய கிரிமினல் வழக்குகள் உள்ளன.

அடுத்த செய்தி