ஆப்நகரம்

தங்கச்சிகளின் படிப்பிற்காக டீ விற்கும் சிறுவன்..!

டெல்லியில் கொரோனா காலத்தில் தங்கச்சிகளின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Oct 2020, 9:20 pm
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலையில்லாமல் போய்விட்டது. பொருளாதார சரிவை ஈடு செய்ய மக்கள் ஏதாவது சிறு தொழிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Samayam Tamil ani picture


இந்நிலையில், தனது தாயார் வேலையை இழந்ததால் சகோதரிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் 14 வயது சிறுவன் தேநீர் விற்பனை செய்யும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுபன் (15) என்ற சிறுவனின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தாயின் அரவணைப்பில் சுபனும், அவனது இரு சகோதரிகளும் இருந்து வந்தனர். கணவன் இறந்த பிறகு சுபனின் தாய் பள்ளி பேருந்து உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.


கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் அந்த வேலையையும் இழந்துள்ளார். இதனால், சிறுவன் குடும்பத்தை ஆதரிப்பதற்காக நாக்பாடா, பெண்டி பஜார் மற்றும் டெல்லியில் உள்ள பிற பகுதிகளில் தேநீர் விற்று வருகிறான்.

நவம்பர் 1 முதல் மாறும் ரூல்ஸ்; சாமானியர்கள் வாழ்வை புரட்டி போடும் விஷயங்கள்!

இதுகுறித்து சிறுவன் செய்தியாளர்களிடம் கூறியது "என் அம்மா ஒரு பள்ளி பேருந்து உதவியாளர், ஆனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, எனவே நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறோம். நான் பெண்டி பஜாரில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்து நாக்பாடா, பெண்டி பஜார் மற்றும் பிற பகுதிகளில் விற்கிறேன். எனக்கு ஒரு கடை இல்லை. ஒரு நாளில் 300-400 ரூபாய் வருமானம் வருகிறது. நான் அதை என் அம்மாவிடம் கொடுத்து கொஞ்சம் சேமிக்கிறேன். நிலைமை சரியானதும் எனது படிப்பை தொடங்குவேன் " என இவ்வாறு சிறுவன் கூறினான்.

அடுத்த செய்தி