ஆப்நகரம்

கேரளாவில் முழு ஊரடங்கு: அடேயப்பா, பாதிப்பு இவ்வளவு ஆகிருச்சா?

கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 8 May 2021, 11:55 am
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil Kerala lockdown


நாடு முழுவதும் முழு பொது முடக்கத்தை விதிக்க வலியுறுத்தி மருத்துவ வல்லுநர்கள், எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஊரடங்கு அறிவித்தால் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பணிகளை அரசு செய்யவேண்டும். இதனாலே மத்திய அரசு அது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றாசாட்டு எழுகிறது.

ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி? வெளியான முழு விவரம்!

இருப்பினும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் முழு ஊரடங்கை விதித்து வருகின்றன. கேராளவில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளும் வேகமெடுத்து வருகின்றன.

பாதிப்புகளை கட்டுப்படுத்த அங்கு இன்று (மே 8) முதல் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் கொரோனா பரவல் சங்கிலி உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதைத் தடுக்க அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து இலவசமாக ரேஷன் பொருள்களை வழங்கி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு: அரசு அதிரடி அறிவிப்பு!
ஊரடங்கின் போது சரக்குகளை ஏற்றி இறக்குதல் அனுமதிக்கப்படும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மோசமாக பாதிக

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவசர நோக்கங்களுக்காக வெளியே செல்ல விரும்புவோருக்கு காவல்துறை பாஸ் வழங்கும் என்று முதல்வர் கூறினார்.

அடுத்த செய்தி