ஆப்நகரம்

இடது காலுக்குப் பதிலாக வலது காலில் ஆபரேஷன்: தவறு செய்துவிட்டு மழுப்பும் அரசு மருத்துவர்

கேரளாவில் அரசு மருத்துவர் ஒருவர் இடது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Dec 2018, 6:23 pm
கேரள மாநிலம் மலப்புரத்தில் நீலாம்பூரைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவர் மலப்புரம் அரசு மருத்துவமனையில் இடது காலில் அறுவை சிகிச்சைக்காகச் சென்றபோது, மருத்துவர் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Malayalam-image


ஒராண்டுக்கு முன் விபத்து ஒன்றில் ஆயிஷாவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருக்கு இடது காலில் இரும்பால் செய்யப்பட்ட செயற்கை எலும்பு பொறுத்தப்பட்டிருக்கிறது.

அந்த செயற்கை எலும்பை நீக்குவதற்காகவே கடந்த வாரம் மலப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் ஆயிஷா. தனது இடது காலின் எக்ஸ்ரே சான்றிதழையும் அப்போது மருத்துவமனையில் சமர்ப்பித்திருக்கிறார்.

ஆனால், மருத்துவர் இடது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது காலில் செய்திருக்கிறார். பின் தவறாக அறுவை சிகிச்சை செய்துவிட்டதை உணர்ந்து இரண்டாவதாக இடது காலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆயிஷாவின் குற்றச்சாட்டை அறிந்த மருத்துவர் தான் சரியாகவே அறுவை சிகிச்சை செய்ததாகவும் தவறு செய்தது அந்தப் பெண்தான் என்றும் பல்டி அடிக்கிறார்!

அடுத்த செய்தி