ஆப்நகரம்

மாரடைப்பு காரணமாக திடீரென சிறுத்தை சச்சின் பலி: கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள்!

மேற்குவங்க மாநிலத்தில் சச்சின் என்று பெயரிடப்பட்டிருந்த ஆண் சிறுத்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது

Samayam Tamil 20 Dec 2020, 7:40 pm
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் பெங்கால் சஃபாரி பார்க் எனும் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பாதுகாப்பட்டு வந்த ஆண் சிறுத்தைக்கு சச்சின் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த சிறுத்தை பூங்காவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த சிறுத்தையானது கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பூங்காவில் இருந்து திடீரென மாயமானது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, சிறுத்தையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, சில நாட்களுக்கு பின்னர் சச்சின் சிறுத்தை தானாகவே மீண்டும் பூங்காவுக்கு திரும்பியது. அப்போது முதல் சிறுத்தை சச்சின் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த சிறுத்தை சச்சினுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை சச்சின் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த தகவலை பெங்கால் சஃபாரி பார்க் இயக்குநர் உறுதி படுத்தியுள்ளார்.

மீண்டும் ஊரடங்கா; முகக்கவசம் இன்னும் எத்தனை மாசத்திற்கு? வெளியான புது உத்தரவு!


மாரடைப்பு காரணமாக சச்சின் சிறுத்தை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதனுடைய உடல் பாகங்களின் மாதிரிகள் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி