ஆப்நகரம்

கால்களை கழுவி என்ன பயன்? துப்புரவு ஊழியர்களின் மரணத்தை தடுக்க முடியவில்லையே!

வாரணாசியில் துப்புரவு ஊழியர்களின் கால்களை மோடி கழுவிய நிலையில், இருவர் மரணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Mar 2019, 5:50 pm
வாரணாசியில் உள்ள கண்ட் தானே பகுதியில் எல்&டி நிறுவனத்தால் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் இரு துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஷிவ்பூரியைச் சேர்ந்த சந்தன், மொதிஹரியைச் சேர்ந்த ராஜேஷ், உமேஷ் ஆகியோர் ஆவர்.
Samayam Tamil Modi


அதிகாலை 4 மணிக்கு பணியைத் தொடங்கினர். இந்நிலையில் 4.30 மணியளவில் சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று ஊழியர்களும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து உமேஷ் தப்பித்துக் கொள்ள, சந்தன் மற்றும் ராஜேஷால் தப்ப முடியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த இரு ஊழியர்களின் உடல்களை மீட்டு தீன்தயாள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இருவர் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சஃபாய் கர்மசாரி அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த பெஸ்வாடா வில்சன் இட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருவர் பலியாகி உள்ளனர்.

இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரும் பொறுப்பேற்று, எந்தவித உதவிகளும் செய்ய முன்வரவில்லை. என்ன ஒரு அசிங்கம்! என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சுத்தம் செய்ய வேண்டியது எங்கள் கால்களை அல்ல. உங்கள் மனதைத் தான். 2018ஆம் ஆண்டில் மட்டும் கழிவு மற்றும் செப்டிங் டாங் மூலம் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி