ஆப்நகரம்

இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்: பக்தா்களின் எதிா்ப்பால் மீண்டும் பதற்றம்

இருமுடி கட்டிய பெண் பக்தருடன் இணைந்து பெண் பத்திாிகையாளா் ஒருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல கோவில் சன்னிதானத்தை நோக்கி பயணித்து வருகின்றனா்.

Samayam Tamil 19 Oct 2018, 9:18 am
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோவில் சன்னிதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
Samayam Tamil Kavitha Sabarimala


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத் வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி தீா்ப்பு வழங்கியது. மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தீா்ப்பின் அடிப்படையில் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீா்ப்பை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவதற்கு எதிா்ப்பு தொிவித்து ஐயப்பன் பக்தா்கள் பலரும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். மேலும் கோவிலுக்குள் செல்லும் முனைப்பில் கேரளாவைச் சோ்ந்த ஐயப்பன் பக்தை ரெஹானா பாத்திமா இருமுடி கட்டி கோவில் சன்னிதானத்தை நெருங்கியுள்ளாா். இதே போன்று கோவிலுக்குள் செல்லும் எண்ணத்தில் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த பெண் பத்திாிகையாளா் கவிதா என்பவரும் உடன் வந்துள்ளாா்.



இவா்கள் இருவரையும் உரிய பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் விதமாக காவல் துறையினா் அவா்களுக்கு தலைக்கவசம், பாதுகாப்பு உடை உள்ளிட்டவையுடன் இருவரும் கோவில் சன்னிதானம் பகுதியை நெருங்கியுள்ளனா்.

இருப்பினும் கோவில் சன்னிதானம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் போராட்டக்காரா்கள் கலைந்துசெல்ல மறுப்பு தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி