ஆப்நகரம்

ஸ்டெர்ச்சர் இல்லாததால் போர்வையில் அமர்த்தி இழுத்து செல்லப்பட்ட கால் உடைந்த பெண்..!!

கால் உடைந்த பெண்ணை ஸ்டெர்ச்சர் இல்லாததால் பெட்ஷீட்டில் இழுத்துச்சென்று சிகிச்சை அளித்த அவலம் மஹாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 3:28 pm
கால் உடைந்த பெண்ணை ஸ்டெர்ச்சர் இல்லாததால் பெட்ஷீட்டில் இழுத்துச்சென்று சிகிச்சை அளித்த அவலம் மஹாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
Samayam Tamil woman carried in bedsheet
கால் உடைந்த பெண்ணை பெட்ஷீட்டில் இழுத்து சென்று சிகிச்சை..!!


மஹாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், கால் உடைந்த காரணத்தினால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது அந்த மருத்துவமனையில் ஸ்டெர்ச்சரே இல்லை, இதனால் கவலையடைந்த பெண்ணின் உறவினர்கள் பெட்ஷீட்டில் கால் உடைந்த பெண்ணை படுக்க வைத்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் இழுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களில் ஒருவர், அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி பேசிய மருத்துவமனை அதிகாரி ஒருவர், கால் உடைந்த பெண்ணின் உறவினர்கள் ஸ்டெர்ச்சர் எடுத்து வரும் வரை பொறுமை காக்கவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லாமல் இப்படி அவர்கள் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

ஸ்டெர்ச்சர் இல்லாமல் கால் உடைந்த பெண்ணை பெட்ஷீட்டில் இழுத்து செல்லப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நாத்கேட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மருத்துவமனை மேற்பார்வையாலர் சந்திரகாந்த் மஸ்ஸ்கே, பொறுப்பில்லாமல் இந்த சம்பவம் ஏற்பட காரணமாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறினார்.

அடுத்த செய்தி