ஆப்நகரம்

ஆதார் கார்டு ரகசியங்கள் கசியாமல் தடுக்க விர்ச்சுவல் அடையாள எண்!!

ஆதார் விவகாரத்தில் தனி நபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ஆதார் கார்டு ரகசியங்களை பாதுகாக்கும் வகையில் விர்ச்சுவல் அடையாள எண் அறிமுகமாகிறது.

Samayam Tamil 11 Jan 2018, 10:40 am
ஆதார் விவகாரத்தில் தனி நபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ஆதார் கார்டு ரகசியங்களை பாதுகாக்கும் வகையில் விர்ச்சுவல் அடையாள எண் அறிமுகமாகிறது.
Samayam Tamil aadhaar adds fresh security layer with 16 digit virtual id
ஆதார் கார்டு ரகசியங்கள் கசியாமல் தடுக்க விர்ச்சுவல் அடையாள எண்!!


ஆதார் எண் கசிந்து தனிப்பட்ட நபரின் ரகசியங்கள் வெளியாகி வருவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் வகையில் தற்போது மத்திய அரசு புதிய விர்ச்சுவல் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதம் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.

இந்த எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்தின் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த எண் வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஆதார் கார்டு வைத்திருக்கும் 119 கோடி பேருக்கும் வழங்கப்படும். 16 எண்கள் கொண்டதாக இருக்கும் இந்த விர்ச்சுவல் அடையாள எண். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது வேறு விர்ச்சுவல் எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.

விர்ச்சுவல் அடையாள எண்ணை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க முடியாது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது சிம் கார்டு பெற வேண்டுமானால், பெயர், பிறந்த தேதி, புகைப்படம், முகவரி, மொபைல் எண் என்று அனைத்தும் பகிரப்படுகிறது. புதிய முறையில் தேவையான விவரங்கள் மட்டுமே பகிரப்படும். பாஸ்போர்ட் போன்ற இடங்களில் அனைத்து விவரங்களையும் பகிர வேண்டியது இருக்கும்.

அடுத்த செய்தி