ஆப்நகரம்

போஸ்ட் ஆபிஸ்க்கும் ஆதார் கட்டாயம்

போஸ்ட் ஆபிஸ் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNN 6 Oct 2017, 10:52 pm
போஸ்ட் ஆபிஸ் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil aadhar is compulsory for post office deposits
போஸ்ட் ஆபிஸ்க்கும் ஆதார் கட்டாயம்


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆதார் எண்னை பல்வேறு நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்கி வருகிறது. மேலும், ஆதார் கட்டாயம் இல்லாத சில துறைகளில், அதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போஸ்ட் ஆபிஸ் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், போஸ்ட் ஆபிஸ், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் புரோவிடண்ட் போன்றவற்றில் சேமிப்பு கணக்கை தொடங்குதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி