ஆப்நகரம்

Naresh Yadav: போலீஸ் நேர்மையாக விசாரிக்க வேண்டும்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ்

நரேஷ் யாதவ், “யார் சுட்டது என்று தெரியவில்லை. கோயிலுக்குப் போய் திரும்பி வரும்போது 4 முறை சுட்டனர். காவல்துறை நேர்மையாக விசாரித்தால் உண்மை தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார். ​​

Samayam Tamil 12 Feb 2020, 11:51 am
மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கவிருக்கிறது அர்விந்த் கெஜ்ரிவால் தலைமியிலான ஆம் ஆத்மி கட்சி. மோடி , அமித்ஷா உள்ளிட்ட பாஜக பெருந்தலைகளின் பிரச்சாரத்தையும் முறியடித்து, 70க்கு 62 இடங்களில் வென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியினரால், டெல்லி முழுக்க கோலாகலமாகக் காட்சியளிக்கிறது.
Samayam Tamil naresh yadav


இந்நிலையில், மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வென்ற ஆம் ஆத்மி வேட்பாளர் நரேஷ் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

டெல்லியில் உள்ள கிஷன்கார்க் பகுதி வழியே அவரது வாகனம் வந்துக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் சிலர் கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அதிர்ஷ்டவசமாகவே உயிர்தப்பினார்.

Delhi Results: ஆம் ஆத்மிக்கு வெற்றி... பாஜகவுக்கு மீட்சி... இது வெற்றிகரமான தோல்விதான்...

ஆனால், அவருடன் பயணித்த ஆம் அத்மி தொண்டர் அசோக் மான் என்பவர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், ஹரேந்தர் என்னும் மற்றொரு ஆம் ஆத்மி தொண்டரும் காயமடைந்துள்ளார்.


இதுகுறித்து தெரிவித்த நரேஷ் யாதவ், “யார் சுட்டது என்று தெரியவில்லை. கோயிலுக்குப் போய் திரும்பி வரும்போது 4 முறை சுட்டனர். காவல்துறை நேர்மையாக விசாரித்தால் உண்மை தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி முதலமைச்சர் வசம் உள்ளது என்றாலும், காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி