ஆப்நகரம்

வேட்டி, சேலையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ தம்பதி!

2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது

Samayam Tamil 11 Dec 2019, 1:55 pm
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் தங்களது நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.
Samayam Tamil அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ
அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ


உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு: என்ன பேசினோம்.?மனம் திறந்த அபிஜித் பானர்ஜி

இந்நிலையில், இந்த பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அப்போது அபிஜித் பானர்ஜி வேட்டி அணிந்தும், அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ சேலை அணிந்தும் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.

அபிஜித் இடதுசாரி, அவரை மக்கள் நிராகரித்துவிட்டனர்: பியூஷ் கோயல்

அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்நாடின் குடியுரிமை பெற்றுள்ளார்.அத்துடன் மிகவும் குறைந்த வயதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அறிவிக்கப்பட்டவர் என்ற பெருமையை எஸ்தர் டஃப்லோ பெற்றுள்ளார். அவருக்கு வயது 46. அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதையடுத்து, சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அபிஜித் பானர்ஜி,“இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் நிதிச்சூழல் குறித்து கவலைப்படாமல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும், தேவையை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி