ஆப்நகரம்

Gauri Lankesh: பெங்களூரில் கௌரி லங்கேஷ் நினைவு தின பேரணி

கன்னடப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்களின் பேரணி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.

Bangalore Mirror Bureau 5 Sep 2018, 12:43 pm
கன்னடப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்களின் பேரணி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.
Samayam Tamil gJwKEtv7wuWfpn8E


கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, நாடு முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியறுத்தத் தொடங்கினர். இதனிடையே கௌரி கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, கௌரி படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்பவரைக் கைது செய்துள்ளது.
இந்நிலையில், இன்று கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெங்களூரில் சமூக ஆர்வலர்கள் பலர் 'நான் கௌரி' (I am Gauri) என்ற பேட்ஜ் அணிந்து பேரணி செல்கின்றனர்.

காலேயின் டைரியில் கொலை செய்ய திட்டமிட்டுள்ள 34 பேரின் பெயர்ப் பட்டியல் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வி.சி.க. பொதுச்செயலாளரும் ஆகிய ரவிக்குமார் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி