ஆப்நகரம்

Jammu Kashmir: காஷ்மீர் விவகாரம்: புதிய சர்ச்சையை கிளப்பிய கமல் ஹாசன்!

இன்னும் ஏன், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 18 Feb 2019, 3:44 pm
இன்னும் ஏன், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil haasan


காஷ்மீல் ஏன் இதுவரை பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல் ஹாசன் கூறுகையில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை ஆசாத் காஷ்மீர் என்று குறிப்பிடுகிறார்.

ஆசாத் காஷ்மீரில், ரயில்களில் ஜிஹாத் தீவிரவாதிகளின் புகைப்படங்களை இடம்பெறச் செய்து அவர்களை ஹீரோக்களாக பார்க்கின்றனர். இது ஒரு முட்டாள்தனமான செயல். இந்தியாவும் முட்டாள்தனத்தின் சமமான அளவாக செயல்படுகிறது. சிறந்த நாடாக தன்னை நிரூபிக்க விரும்பினால், இது போன்று செயல்படக்கூடாது. எங்கு அரசியல் தொடங்குகிறதோ அங்கு தான் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு வேளை இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் சுமூக நட்புற ஏற்பட்டால், எல்லைப்பாதுகாப்பில் பிரச்சனை இருக்காது. அப்படி சுமூக நட்புறவு இருந்தால் ஏன் வீரர்களை இழக்க வேண்டும்? ஏன் எல்லையை பாதுகாக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் குறித்து பேசிய அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பிறகு காஷ்மீர் பிரச்சனை குறித்து எழுதியிருந்தேன். ஏன் இன்னும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை? ஏன் பயப்படுகிறார்கள்? நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசன் இவ்வாறு கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதே போன்று கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு ஐநாவும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி