ஆப்நகரம்

வானில் நிகழப் போகும் அதிசயம்; அதுவும் 397 வருஷத்துக்கு அப்புறமாம்!

நம் வாழ்நாளில் பார்த்திராத அதிசயம் ஒன்று வானில் நிகழப் போவதாக விண்வெளி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 7 Dec 2020, 11:27 am
உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாகப் புரட்டி போட்டுள்ளது. பல்வேறு விஷயங்களுக்கு தடை போட்டுள்ளது. ஆனால் வானில் நிகழ்வுகளுக்கு அப்படி யாரும் தடை போடவில்லை. நம் வாழ்நாளில் பார்த்திராத ஏராளமான அதிசயங்கள் வானில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களாக திகழும் வியாழன் மற்றும் சனி ஆகியவை மிகவும் நெருக்கமாக வரப் போகின்றன. இது அன்றைய தினம் மாலை 5.28 மணியில் இருந்து 7.12 மணி வரை நிகழ்கிறது. உலகின் தென்மேற்கு பகுதியில் இருந்து தெளிவாக காணலாம்.
Samayam Tamil great conjunction 2020


இதனை ‘கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு’ என்று விண்வெளி அறிஞர்கள் அழைக்கின்றனர். இது 397 ஆண்டுகளுக்கு பிறகு நம்முடைய வாழ்நாளில் நிகழப் போகிறது. எனவே வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இதுவொரு வரப்பிரசாதமாக இருக்கும்.

சூரியனை சுற்றி வர வியாழன் கிரகத்திற்கு 11.8 ஆண்டுகள் ஆகும். அதுவே சனி கிரகத்திற்கு 29.5 ஆண்டுகள் ஆகும். கடைசியாக 1623ஆம் ஆண்டு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் மிகவும் நெருக்கமாக வந்தன. இதனை வானில் பார்ப்பதற்கு சிறிய நட்சத்திரங்களைப் போன்று காட்சி அளிக்கும்.

பஸ், லாரி, ரயில்கள் ஓடுமா? இந்தியாவை முடக்கும் பாரத் பந்த்!

ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இருக்கும் என்பதால் பிரித்தறிய முடியாத நிலை கூட ஏற்படும். அதேசமயம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று இவை இரண்டும் 735 மில்லியன் கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வரும் 2080ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வானில் இத்தகைய நிகழ்வை வானில் காணலாம். ஆனால் அப்போது டிசம்பர் 21ஆம் தேதி போன்று மிக நெருக்கமாக காணப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி