ஆப்நகரம்

“பப்ஜி உள்பட 275 ஆப்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்படும்”

டிக்டாக் தடையைத் தொடர்ந்து பாரபட்சமின்றி அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பட்டியலில் பப்ஜியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 28 Jul 2020, 5:13 pm
இந்திய-சீன எல்லை பிரச்சினை காரணமாக நாட்டில் பயன்பாட்டிலிருந்த 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், தடை செய்யப்பட்ட சீனா ஆப்களால் தனிநபரின் தகவல்கள் திருடப்படுகின்றன. குறிப்பிட்ட அந்த தகவல்களை வைத்து சீன அரசு இந்தியாவை உளவு பார்க்கவும் அதிக வாய்ப்பு உள்ளன. இதன் காரணமாகவே டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 ஆப்களுக்கு தடை விதித்துள்ளோம் எனக் கூறியது. இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட 59 ஆப்களை போன்றே செயல்பட்ட 47 ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.
Samayam Tamil “பப்ஜி உள்பட 275 ஆப்கள் இந்தியாவிலிருந்து துறத்தப்படும்”
“பப்ஜி உள்பட 275 ஆப்கள் இந்தியாவிலிருந்து துறத்தப்படும்”


இந்த அறிவிப்பு சீன அரசை காட்டிலும் இந்தியக் குடிமகன்கள் பலரை அதிர்ச்சியடையச் செய்தது. குறிப்பிட்ட சீன ஆப்களுக்கு இந்திய மக்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது. பலர் அவற்றுக்கு அடிமையாகியே போனர். இந்த சூழலில் மத்திய அரசு இப்போது பப்ஜி உள்பட 275 சீன ஆப்களை தடை செய்யலாமா என ஆலோசனை நடத்தி வருகிறது.

பப்ஜி உள்ளிட்ட இந்த ஆப்களால் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுமா, அதன் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

பப்ஜி ஆப் டென்செண்ட் கேம்ஸ் என்ற நிறுவனத்தின் பெரும்பாலான முதலீட்டில் சீனாதான் கொண்டுள்ளது. பப்ஜி மட்டுமல்லாது, அலிபாபா, அலி எக்ஸ்பிரஸ், குறிப்பாக டிக்டாக் நிறுவனத்தின் யூலைக் என்ற ஆப்பும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, “அரசு குறிப்பிட்ட ஆப்களுக்கு தடைவிதிக்கலாம், இல்லை என்றால் சில ஆப்களுக்கு மட்டும் தடை விதிக்கலாம். ஒருவேளை தடை விதிக்கப்படாமலும் இருக்கலாம்” என்கிறார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதிலளிக்க மறுத்தனர். எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு மூத்த அதிகாரி ஒருவர், “பட்டியலிடப்பட்ட ஆப்களில் சிலவற்றுக்கு நிச்சயம் தடை விதிக்க பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்டவை பல்வேறு விதங்களில் ஆபத்தானதாக திகழ்கிறது” என விளக்கம் அளித்தார்.

சீன பொருட்களுக்கு தடை... பொருளாதார யுத்தத்தை தொடங்கிய இந்தியா!

சீனாவின் ஆப்களுக்கு நம் நாட்டில் சுமார் 30 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அதாவது நாட்டில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் 3இல் 2 பங்கு பேர் தங்கள் போனில் ஒரு சீன ஆப்பையாவது வைத்திருப்பார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த தடைகள் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாகக் கட்டமைக்கும் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஜூலை தடை செய்யப்பட்ட 59 சீன ஆப் நிறுவனங்களின் கருத்துக் கேட்க மத்திய அரசு ஒரு குழுவை உருவாக்கி உள்ளது. இதற்காகக் காலவரையறை வகுத்து, தகவல்களைச் சேகரித்து வருகின்றன. இதனால், தடை செய்யப்பட்ட ஆப்கள் தங்கள் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருமே என்றால், அவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி