ஆப்நகரம்

நதி நீர் பிரச்னை : நாளை கர்நாடகாவில் பந்த்!

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் ஜூலை 25 முதல் 28ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது மஹதாயி நதி நீர் பிரச்னைக்காக நாளை கர்நாடக முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 29 Jul 2016, 4:57 pm
பெங்களூரு : கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் ஜூலை 25 முதல் 28ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது மஹதாயி நதி நீர் பிரச்னைக்காக நாளை கர்நாடக முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil after ksrtc strike karnataka bandh called on july 30 over mahadayi river water verdict
நதி நீர் பிரச்னை : நாளை கர்நாடகாவில் பந்த்!


கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 28ம் தேதி 10 சதவீகிதம் உயர்த்த இருந்த ஊதியத்தொகை 12.5 சதவிகிதமாக உயர்த்தி தருகிறோம் என அறிவித்ததற்கு பின், ஊழியர்கள் நேற்று வேலைக்கு திரும்பினர்.

இந்நிலையில், மீண்டும் நாளை முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உருவாகி கோவா வழியாக அரபிக் கடலில் கலக்கும் மஹதாயி ஆற்றின் குறுக்கே 7.56 டிஎம்சி தண்ணீர் தேக்கும் அளவுக்கு புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இதனால் 4 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அதில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு எதிர்த்து மஹதாயி ஆறு நீர் மேலாண்மை தீர்ப்பாயத்திடம் கோவா அரசு புகார் அளித்தது. இந்த புகார் மனுவை விசாரித்த தீர்ப்பாயம் அணை கட்டும் எண்ணத்தை கர்நாடகா கைவிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, கன்னட ஆதரவு இயக்கங்களும், கன்னட சலுவலி வடல் பிரகாஷ் அமைப்பின் தலைவர் வடல் நாகராஜ் உள்ளிட்ட அமைப்புகள், கன்னட திரைப்படத்துறை உள்ளிட்டவை சேர்ந்து நாளை (ஜூலை 30) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி