ஆப்நகரம்

அந்த விஷயத்தை பார்த்ததுமே டிவி ஸ்விட்ச் ஆஃப் - செம காண்டான லாலு பிரசாத்!

பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது லாலு பிரசாத் செய்த விஷயம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 11 Nov 2020, 12:18 pm
கொரோனா தொற்றுக்கு பிறகு நடைபெற்ற நாட்டின் மிக முக்கிய தேர்தலாக பிகார் சட்டமன்ற தேர்தல் இருக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் 74 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக இரண்டாம் இடத்திலும், 43 தொகுதிகளைப் பெற்று ஐக்கிய ஜனதா தளம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
Samayam Tamil Lalu Prasad


அதுவே கூட்டணி வாரியாக பார்க்கும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களிலும், மகாகத் பந்தன் 110 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இளம் தலைவராக உருவெடுத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் முதல்முறை முதலமைச்சராகும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இவருக்கு பிகாரின் இளைஞர்கள் பெருவாரியான ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது வெற்றியை பெறும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையின் கெல்லி பங்களாவில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வருகிறார். ஊழல் வழக்கில் சிறை, உடல்நலக்குறைவால் சிகிச்சை என தீவிர அரசியலில் இருந்து லாலு விலகியிருக்கிறார்.

லாலுவுடன் கைகோர்ப்பாரா நிதிஷ்குமார்? மகாராஷ்டிராவை நினைவுபடுத்தும் பிகார் தேர்தல் முடிவுகள்!

இதனால் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமை ஏற்று மகாகத் பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், லாலுவும் ஆர்வமாக டிவியை ஆன் செய்துள்ளார். தொடக்கத்தில் மகாகத் பந்தன் கூட்டணி முன்னணியில் இருந்தது.

இதனால் உற்சாகமடைந்த லாலுவிற்கு அடுத்த சில மணி நேரங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது. இதைக் கண்டவுடன் லாலு டிவியை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி