ஆப்நகரம்

காதலர் தினத்துக்கு கிட்னி பரிசு.. நெகிழ வைத்த கணவர்!

சிறுநீரக கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் தனது துணைவிக்கு ஒரு கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார் அகமதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவர்.

Samayam Tamil 14 Feb 2021, 5:56 pm
இன்று (பிப்ரவரி 14) உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் நோயால் வாடும் தனது மனைவிக்கு தன் கிட்னியை பரிசாக அளித்துள்ளார்.
Samayam Tamil Vinodbhai Patel - Ritaben Patel


குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் வினோத்பாய் படேல். இவர் தனது துணைவி ரீட்டாபென் படேல் நீண்டகாலம் வாழ வேண்டும் என விருப்பத்தில் அவருக்கு தன் கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார்.

எட்டு மணி நேரம் மாயமான சாலைகள்; டெல்லி மக்கள் பெரும் அவதி!
ரீட்டாபென் படேல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரக செயலழிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் ரீட்டாபென்னுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

செயலிழந்த கிட்னியால் வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். தனது துணைவி நோயால் அவதிப்படுவதை கண்ட வினோத்பாய் தன் கிட்னியை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து வினோத்பாய் படேல், “என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். இந்த பிரச்சினையில் மட்டும் அவர் தனியாக போராட நான் எப்படி அனுமதிக்க முடியும்? எனவே எனது ஒரு கிட்னியை வழங்க முடிவு செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!
அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றுள்ளது. இன்றைய தினம் காதலர் தினம் மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் 23ஆம் திருமண நாளாகும். வினோத்பாய் - ரீட்டாபென் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி