ஆப்நகரம்

ப.சிதம்பரம் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை தாக்கல்

சிதம்பரத்தின் உடல் நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையில்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது

Samayam Tamil 1 Nov 2019, 3:43 pm
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலை தொடர்பான அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil chidambaram


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோ சேட் சிதம்பரம்; என்ன பண்றது? இந்த வாட்டி ’ஜெயில்’ தீபாவளி தான்!

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

எனினும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள இந்த ஜாமின் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை வருகிர 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விடாது துரத்தும் அமலாக்கத் துறை.... ப.சிதம்பரத்துக்கு மீண்டும் திஹார் ஜெயில்!!

இதனிடையே, உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமின் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான நேற்றைய விசாரணையின் போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்துக்கு உடல் அலர்ஜி நோய் மற்றும் வயிற்று வலி உள்ளது எனவும், உடல்நிலை பாதிப்பால் சிதம்பரத்தின் எடை 73 கிலோவில் இருந்து 66 ஆக குறைந்து விட்டது எனவும் வாதிட்டார். அத்துடன், சிதம்பரத்துக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நாகேஸ்வர் ரெட்டி தலைமையில் ஹைதராபாத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரம் உடல் நிலை குறித்து, நாகேஸ்வர் ரெட்டியை உள்ளடக்கிய மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்து வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலை தொடர்பான அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், சிதம்பரத்தின் உடல் நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையில்லை. அவரது சிறை அறையை சுத்தமாக வைத்து கொசுவலை அடித்து தர வேண்டும். அவருக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிதம்பரத்துக்கு சிகிச்சை அளித்து சிறையில் அடைக்க வேண்டும். சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை. அவரது சிறை அறையை மருத்துவ குழு கூறியது போல் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமின் தர மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

அடுத்த செய்தி