ஆப்நகரம்

வதந்தி பரப்புவோருக்கு ஏர் இந்தியா எச்சரிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 8:33 pm
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil air-india


பொதுத்துறை விமான சேவை நிறுவனம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதன் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து புதிய பணியாளர்கள் சேர்க்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதற்கு பதிலளித்து ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் நிரத்தமாக மூடப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டும். அவ்வாறு, வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வதந்தி பரப்பவோர் தேச விரோதிகள் என்றும் அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

அடுத்த செய்தி