ஆப்நகரம்

இந்தியா - அமெரிக்கா இடையே விமான போக்குவரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையே வருகிற 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விமான போக்குவரத்து இயக்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 5 Jul 2020, 8:33 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் நடவடிகையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை ஏர் இந்தியா விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் 4ஆவது கட்டம் ஜூலை 3ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கென்யா, ரஷ்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, மியான்மர், உக்ரைன், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் 170 விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். கனவுடன் பள்ளிக்கு சைக்கிள் பயணம்: சாதித்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஏர் இந்தியா அறிவிப்பு


அந்த வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா - அமெரிக்கா இடையே வருகிற 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 36 விமானங்களை இயக்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஜூலை 6ஆம் தேதி (நாளை) முதல் தொடங்கவுள்ளது. டிக்கெட்டுகளை ஏர் இந்தியா இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி