ஆப்நகரம்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 20 May 2017, 8:58 am
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil aircel maxis case delhi hc sends notice to maran brothers
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்


கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் நடத்தி வந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இது தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Aircel - Maxis case: Delhi HC sends notice to Maran Brothers

அடுத்த செய்தி