ஆப்நகரம்

விமான நடு இருக்கைகள்: ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் சுற்றறிக்கை வெளியீடு!

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது

Samayam Tamil 1 Jun 2020, 5:56 pm
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், விமான பயணத்தின் போது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் சரீர விலகல் கேள்விக்குள்ளாகியது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


முன்னதாக பொது முடக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை ஏர் இந்தியா விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அப்படி வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்கப்பட வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையை ஏர் இந்தியா பின்பற்றவில்லை என குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், திட்டமிடப்படாத சிறப்பு விமான சேவையின் போது, விமானத்தின் நடு இருக்கையில் பயணிகளை ஏற்றி வர ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வருகிற ஜூன் 6ஆம் தேதி வரை அனுமதி அளித்தது. அதன் பிறகு நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசுப் பேருந்துகளிலும் வந்துவிட்டது paytm!!

அத்துடன், குடிமகன்களின் ஆரோக்கியத்தின் மீதுதான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டுமே தவிர வணிக விமான நிறுவனங்கள் மீது அல்ல. விமானத்தில் சரீர விலகல் பின்பற்றவில்லை என்றால் கொரோனா பரவாதா என மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாக சாடினர். மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது கூட சரீர விலகலின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

இதனிடையே, “விமானப் பயணத்தின்போது நடுவரிசை இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதிக்கப்படவில்லை என்றாலும், அது முறையான சரீர விலகலாக இருக்காது. சரீர விலகலுக்கான வரையறையின்படி, அதனை முறையாக பின்பற்றி விமானங்களை இயக்கினால், பயணக் கட்டணத்தை 33 சதவீதம் அதிகரிக்க வேண்டியவரும்” என விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியது சர்ச்சைக்குள்ளானது.

வழிகாட்டுதல்கள்

வழிகாட்டுதல்கள்


இந்த நிலையில், வருகிற 3ஆம் தேதி முதல் விமானப் பயணத்தின் போது விமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் முறையாக கிருமி நாச செய்யப்பட வேண்டும். விமான ஊழியர்கள் பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு முறையான பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். பயணிகளுக்கு முகக்கவசம், தேவையான சானிட்டைசர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பன பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நடு இருக்கைகள் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, முடிந்தவரை நடு இருக்கைகளை காலியாக இருக்குமாறு விமான நிறுவனங்கள் இருக்கைகளை ஒதுக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படி ஒதுக்க இயலவில்லை என்றால், முகக்கவசம், சானிட்டைசர்கள் உள்ளிட்டவற்றுடன் கூடுதலாக பாதுகாப்பு ஆடைகளும் (wrap-around gowns) வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள், விமான நிறுவனங்களின் நலன்களையும், விமானப் பயணிகளைப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி போலவே தெரிகிறது. இதன் மூலம், விமான நடு இருக்கைகளை காலியாக விட சொல்கிறார்களா அல்லது நிரப்ப சொல்கிறார்களா என்ற கேள்வி எழுவதுடன், சரீர விலகலை கடைபிடிப்பது தொடர்பான கேள்வியும் எழுகிறது.

அடுத்த செய்தி