ஆப்நகரம்

உன்னாவ் பாலியல் வழக்கு: உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையும், விரைவான நீதியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ​

Samayam Tamil 7 Dec 2019, 2:59 pm
உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் குற்றத்திற்கு ஆளான இளம்பெண், குற்றம் சாட்டப்பட்டவர்களால் பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil akilesh


உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்ப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், குற்றவாளிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமினில் வெளியே வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணை தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, குற்றம் சாட்டப்பட்ட இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

அட்டூழியங்களை நிறுத்த என்ன செய்யப்போகிறது உ.பி. அரசு- பிரியங்கா காந்தி கேள்வி

இதில், 90 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையும், விரைவான நீதியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜக அரசு ஆதரவளிக்கிறது என்று குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ், நாளைய தினம் மாவட்டம் முழுவதும் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டசபையின் வாசலில் நடக்கும் இந்த தர்ணா போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் பலரும் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி