ஆப்நகரம்

மோடி பேச்சால் யாருக்கு என்ன பயன்? அமைச்சர் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரை மூலம் அகில இந்திய வானொலிக்கு 10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

TNN 21 Jul 2017, 12:21 am
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரை மூலம் அகில இந்திய வானொலிக்கு 10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
Samayam Tamil all india radio rakes in rs 10 crore through pm modis mann ki baat
மோடி பேச்சால் யாருக்கு என்ன பயன்? அமைச்சர் விளக்கம்


பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலமாக மாதம் தோறும் மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் இந்த வானொலி உரை மூலமாக அகில இந்திய வானொலிக்கு இதுவரை ரூ.10 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பிரதமர் வானொலி உரை ஒலிபரப்பாகிறது. இந்தியில் பேசும் பிரதமரின் இந்த உரை 18 மாநில மொழிகளில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2015 - 16ம் ஆண்டில் மட்டும் அகில இந்திய வானொலிக்கு 4 கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2016-17-ம் ஆண்டில் 5 கோடியே 19 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது. பிரதமரின் உரையால் அகில இந்திய வானொலியின் வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி