ஆப்நகரம்

ஆகஸ்ட் 5இல் ராமர் கோயில் அடிக்கல்... அனைத்து முதல்வர்களுக்கும் அழைப்பு

இந்தியாவின் அனைத்து மாநில முதல் அமைச்சர்களையும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 22 Jul 2020, 8:53 pm
இந்தியாவின் நெடுங்காலப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.
Samayam Tamil ram mandhir model


இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு வெறும் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இந்தியாவின் அனைத்து மாநில முதல் அமைச்சர்களையும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்: உலகிலேயே மூன்றாவது பெரிய கோயிலாக வாய்ப்பு

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோயிலை அடிக்கல் நாட்டுவதற்கு முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார் என்றும் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது

அடுத்த செய்தி