ஆப்நகரம்

ஆந்திராவில் புதிய அமைச்சரவை: யாருக்கெல்லாம் வாய்ப்பு?

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2022, 11:51 am
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளது.
Samayam Tamil jagan mohan reddy


ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. 150 தொகுதிகளை கைப்பற்றியது அக்கட்சி. அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன. இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி அமைச்சரவையை மாற்றி அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில் புதிதாக பலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா: அடுத்த லாக்டவுண்? மாவட்டங்களுக்கு பறந்த உத்தரவு!
இதனிடையே நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். புதிய அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமைச்சர்களாக உள்ள 24 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். இதனிடையே வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிமுக அலுவலகத்தில் மீண்டும் சசிகலா விவகாரம்: பாதியில் வெளியேறிய மாஜி!
புதிய அமைச்சரவையை பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், இஸ்லாமியர்கள், பெண்கள் என பல தரப்பினரையும் உள்ளடக்கி ஜெகன் மோகன் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி