ஆப்நகரம்

உச்சநீதிமன்றத்தில் 2வது முறை பெண் நீதிபதிகள் மட்டும் கொண்ட அமர்வு

உச்சநீதிமன்ற வரலாற்றில் 2வது முறையாக பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிக்க உள்ளது.

Samayam Tamil 1 Sep 2018, 12:16 pm
உச்சநீதிமன்ற வரலாற்றில் 2வது முறையாக பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிக்க உள்ளது.
Samayam Tamil justices-banumathi-and-indira-banerjee-sc


உச்சநீதிமன்ற அறை எண் 12ல் வரும் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிக்கும் என உச்சநீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த இரு நாட்களில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிப்பது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு மற்ற நீதிபதிகள் விடுமுறை எடுத்திருந்தால் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்குகளை விசாரித்தது.
நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் தற்போது முதல் முறையாக உச்சநீதிமன்றதில் ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

அடுத்த செய்தி