ஆப்நகரம்

அமர்நாத் யாத்திரைக்கு 2வது குழு புறப்பட்டது

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய 13 ஆயிரம் பேர் கொண்ட 2வது குழு இன்று புறப்பட்டு சென்றது.

TNN 3 Jul 2016, 7:23 pm
டெல்லி: அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய 13 ஆயிரம் பேர் கொண்ட 2வது குழு இன்று புறப்பட்டு சென்றது.
Samayam Tamil amarnath yatra 2nd team starts their journey
அமர்நாத் யாத்திரைக்கு 2வது குழு புறப்பட்டது


காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் தோன்றும் பனி லிங்கத்தை காண, ஏராளமான பக்தர்கள் பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் தற்போது பனி லிங்கம் உருவாகியுள்ளது.

இதனைக் காண ஏராளமான பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த யாத்திரையில் கரடு முரடான மலைப் பாதையில் பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக் கோவிலை சென்றடைய வேண்டும். இந்த ஆண்டிற்கான யாத்திரை நேற்று தொடங்கியது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள், சாதுக்கள் ஆகியோர் அடங்கிய 13 ஆயிரம் பேர் கொண்ட 2வது குழு இன்று புறப்பட்டுச் சென்றது.

இவர்களில் 7 ஆயிரம் பேர் பல்தல் மலையடிவார முகாமில் இருந்தும், 6 ஆயிரம் பேர் பாகல்காம் முகாமில் இருந்தும் புறப்பட்டு சென்றுள்ளனர். பக்தர்கள் வருகையை ஒட்டி, 12,500 துணை ராணுவப் படையினரும், 8,000 மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி