ஆப்நகரம்

அமாவாசையன்று வீட்டை விட்டு வெளியே வராத கர்நாடக முதல்வர்!!

அமாவாசை பூஜைக்காக, கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு சந்திப்புகளை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 10 Oct 2018, 1:40 pm
கர்நாடக முதல்வர் குமாரசாமி, அமாவாசை பூஜைக்காக, அரசு சந்திப்புகளை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil அமாவாசையன்று வீட்டை விட்டு வெளியே வராத கர்நாடக முதல்வர்!!
அமாவாசையன்று வீட்டை விட்டு வெளியே வராத கர்நாடக முதல்வர்!!


கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகள் இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, மிகுந்த ஆன்மீக நம்பிக்கை உள்ளவர். இதன் காரணமாக, ஒவ்வொரு அமாவாசையும் அவரது வீட்டில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில், ஜோதிடர் ஒருவர் செவ்வாய் கிழமை வரை அமாவாசை பழங்கள் தொடரும் என்று கூறியதால், செவ்வாய் கிழமை மதியவேளை வரையில், குமாரசாமி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், பல அரசுப் பணிகள் முடங்கியதாக கூறப்படுகிறது.

அதிலும் முக்கியமாக, விபி தீன் தயாளு நாயுடுவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியவே வரவில்லை. மேலும், விழாவில் பங்கேற்க வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் குமாரசாமி நேரில் சென்று வரவேற்காமல், அமைச்சர் பந்தீப்பா காஷேம்பூரை அனுப்பினார்.

இது ஒருபுறம் இருக்க, இது குறித்து பதிலளித்த முதல்வரின் ஊடகத் தொடர்பாளர், முதல்வர் குமாரசாமி, ராமனகரா தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் காலையில் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் தனது அரசுப் பணிகளை மாலைக்கு தள்ளி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி