ஆப்நகரம்

தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் வாஜ்பாய் உடல்நிலை

வயது மூப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் கேட்டறிந்தனர்.

Samayam Tamil 11 Aug 2018, 10:32 pm
வயது மூப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் கேட்டறிந்தனர்.
Samayam Tamil minister-minister-capital-virendra-vajpayee-during-meeting_7e9ebbc8-77cf-11e8-ad22-53d0ea2909b4
தீவிர கண்காணிப்பில் வாஜ்பாய் உடல்நிலை..!!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலிருந்து ஓய்வு பெற்றார். அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வாஜ்பாய்.

மேலும் அவரது உடல்நலம் குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கேட்டு வருகிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் அவரது உடல் நிலையில் இன்று மிகவும் பின்னடைவு ஏற்பட்டது.

எனினும் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக, தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 வயதாகும் வாஜ்பாய் மூட்டுவலி பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 10 முறை மூட்டு வலிக்கான அவருக்கு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாஜ்பாயின் உடலில் பக்கவாத பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர பேச முடியவில்லை. அதை தொடர்ந்தே அவர் தீவிர அரசியலில்லிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

வாஜ்பாய் உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் தகவல்களை தொடர்ந்து கேட்டு பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி