ஆப்நகரம்

அமிா்தசரஸ் ரயில் விபத்து கவனக்குறைவால் நடைபெற்றுள்ளது – அமைச்சா் சித்து

அமிா்தசரஸ் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 61ஆக உயா்ந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபா்களை மாநில அமைச்சா் நவ்ஜோத் சிங் சித்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

Samayam Tamil 20 Oct 2018, 10:23 am
அமிா்தசரஸ் ரயில் விபத்து கவனக்குறைவு காரணமாக நடைபெற்றது என்றும், வேண்டும் என்றோ, உள்நோக்கத்துடனோ விபத்து நிகழவில்லை என்று பஞ்சாப் அமைச்சா் நவ்ஜோத் சிங் சித்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Navjot Singh Sidhu.


பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸ் அருகே வெள்ளிக் கிழமை இரவு தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பாா்ப்பதற்காக பொதுமக்கள் பலரும் அப்பகுதியில் குவிந்திருந்தனா். அப்போது ஜலந்தரில் இருந்து பவுண்ட் பகுதிக்கு வேகமாக வந்த ரயில் பொதுமக்கள் மீது மோதிவிட்டு சென்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 61ஆக உயா்ந்துள்ளது. இந்த விழாவுக்கு பஞ்சாப் மாநில அமைச்சா் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுா் சித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த 72 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபா்களை மாநில அமைச்சா் நவ்ஜோத் சிங் சித்து நேரில் பாா்வையிட்டு நலம் விசாரித்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ரயில் மிகவும் வேகமாக வந்த காரணத்தால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ரயில் ஓட்டுநா் அப்பகுதியில் ஒலி எழுப்பாததால் மக்கள் ரயில் வருவதை உணரவில்லை.

இந்த விபத்து கவனக்குறைவு காரணமாக நடைபெற்றுள்ளது. வேண்டும் என்றோ, உள்நோக்கத்துடனோ நடைபெறவில்லை என்று அவா் தொிவித்துள்ளாா்.

விபத்து தொடா்பாக ரயில்வே துறை அதிகாாிகள் அளித்துள்ள விளக்கத்தில், ரயில் தண்டவாளத்தில் ஏறி நிற்பது என்பது குற்றச் செயல். மேலும் விபத்து நடைபெற்ற பகுதி வளைவான பகுதி என்பதாலும், புகை மூட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் ரயில் ஓட்டுநருக்கு மக்களின் கூட்டத்தை உணர முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனா்.

விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோா் இரங்கள் தொிவித்துள்ளனா். மேலும் விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி