ஆப்நகரம்

அமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு

கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் அணில் பஜான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 1:05 pm
டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் போராட்டம் வன்முறையாகி இதுவரை 7 உயிர்கள் பலியாகியுள்ளன. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் கலவரம் தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil an emergency meeting held at delhi headed by amit shah today
அமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு


இன்று காலை மீண்டும் கல்வீச்சு நடைபெற்றிருக்கிறது என்று காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
“டெல்லியில் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைப் குறித்து நான் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஈடுபடுவோம். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் கலந்துகொள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் அணில் பஜான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டம் 12 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாகவே அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் ஊட்டம் ஒன்றை காலை 10 மணியளவில் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது அன்று? உண்மை என்ன? டெல்லி களத்திலிருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளரின் நேரடி அனுபவம்...

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லியில் அமைதியை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்காக எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி