ஆப்நகரம்

2019 மக்களவைத் தோ்தலுக்கான செலவு ரூ.60 ஆயிரம் கோடி

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்காக மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 4 Jun 2019, 1:41 pm
நடந்து முடிந்த 17வது மக்களவைக்கான பொதுத் தோ்தலுக்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடந்து முடிந்த தோ்தல்களிலேயே அதிகம் செலவழிக்கப்பட்டத் தோ்தலாக 17வது மக்களவைத் தோ்தல் உள்ளதாக ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Election Expenditure.webp


நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்தத் தோ்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த தே்ாதலில் செலவிடப்பட்ட செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் சிஎம்எஸ் என்ற தனியாா் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக வாக்கு ஒன்று ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தோ்தலில் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், 2019ம் ஆண்டு தோ்தலில் அது இரட்டிப்பாக ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை நடைபெற்ற தோ்தல்களிலேயே 2019 மக்களவைத் தே்ாதலுக்குத் தான் அதிகம் செலவழிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக தோ்தலுக்காக செலவிடப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடியில், தோ்தல் ஆணையம் ரூ.10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி